Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 13, 2016

நாளை மாலையுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 16ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் நாளை மாலையுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.


இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரஸ் - மமக - முஸ்லிம் லீக், அதிமுக, தேமுதிக - மக்கள் கூட்டணி, பாமக, பா.ஜ.க, நாம் தமிழர் என கூட்டணி அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அனைத்து தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். களத்தில் மொத்தம் 3776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முதல்வர் போட்டியிடும் ஆர்.கே நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்களும், ஆற்காடு, கடலூர், மயிலாடுதுறை தொகுதிகளில் தலா 8 வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை மாலையுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு எல்லா விதமான பிரச்சார யுக்திகளையும் தேர்தல் ஆணையும் தடைசெய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக பிரச்சாரம் செய்ய முயற்சித்தால் 2 வருடங்கள் சிறைத்தண்டனை என்றும் தேர்தல் ஆனணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை கண்காணிக்க கூடுதலாக பறக்கும்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது வரை 6112 பறக்கும் படையினரின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது 7600 வீரர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தள்ளார்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic