ஜாதி மாறி கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆணவப் படுகொலைக்கு ஆளான தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலையில் நடுரோட்டில் பட்டப்பகலில் ஏராளமான பொதுமக்கள் கூடுகின்ற இடத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக சங்கர் கவுசல்யா ஆகிய இருவரும் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். உடலில் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![]() |
| மணக்கோலத்தில் சங்கர் - கவுசல்யா |
சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை தாய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments