ஆவேசமாக பேசி வருவதால் சீமானின் தொண்டையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிதுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் "நாம் தமிழர் கட்சி" 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களுக்காக இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஊழல், ஈழம் போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்து அனைத்து திராவிட கட்சிகளையும் சரமாரியாக தாக்கி ஆவேசமாக பேசிவருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் திரு சீமான் பிரச்சாரம் செய்வதாக இருந்த கூட்டம் திடீர் என ரத்து செய்யப்பட்டது. சீமானின் உடல் நிலை சரியில்லாததாலும், அவரது தொண்டையிலிருந்து இரத்த கசிவு ஏற்பட்டதால் இப்பிரச்சாரம் ரத்து செய்வதாகவும் வரும் 14ஆம் தேதிக்குள் மீண்டும் சீமான் பிரச்சாரம் செய்ய வருவார் என்றும் அக்கட்சியின் மாதவரம் வேட்பாளர் ஏழுமலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
இலவசங்களை அறிவித்தும், மற்ற கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சித்தும், இத்துனை நாட்கள் ஆட்சி செய்தபின்னரும் தான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று பிரச்சாரம் செய்யும் தலைவர்களுக்கு மத்தியில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி பிரச்சாரம் செய்து வரும் சீமான் இத்தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் "நாம் தமிழர் கட்சி" 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களுக்காக இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இலவசங்களை அறிவித்தும், மற்ற கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சித்தும், இத்துனை நாட்கள் ஆட்சி செய்தபின்னரும் தான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று பிரச்சாரம் செய்யும் தலைவர்களுக்கு மத்தியில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி பிரச்சாரம் செய்து வரும் சீமான் இத்தேர்தலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே தெரிகிறது.

No comments:
Write comments