Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 26, 2016

மனைவியை அடிப்பதற்கு அனுமதி அளிக்க கோரிக்கை



பஞ்சாப் மாநிலத்தில் இஸ்லாமிய சித்தாந்த சபை (சி.ஐ.ஐ) சார்பாக சில கோரிக்கைகளை அரசுக்கு வைக்க இருக்கின்றது. அதில் மனைவி தவறு செய்துவிட்டாலோ அல்லது கணவனின் பேச்சை கேட்காமல் நடந்து கொண்டாலோ லேசாக அடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அப்படி அடிப்பதை குற்றமாக கருத்தக்கூடாது என கோரிக்கை வைக்க இருப்பதாக சி.ஐ. ஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் தங்களது மத கோட்பாடுகளை பின்பற்றுவதற்கென தனியாக சட்டம் உள்ளது. இஸ்லாமியர்கள் தங்களின் மத சட்டப்படி சிவில் வழக்குகளை ஏற்று நடப்பது வழக்கம். இந்த வகையில் பஞ்சாபில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு அரசுக்கு சில கோரிக்கைகளை வைக்க இருக்கிறது. அதில் கணவண் தன்னுடைய மனைவி தனது சொல்படி நடக்காவிட்டாலோ, ஆடை உடுத்தாவிட்டாலோ, குரலை உயர்த்தி சத்தமாக பேசினாலோ, உறவுக்கு அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மறுத்தாலோ லேசாக அடிக்கலாம் என்றும் அப்படி அடிப்பது குற்றமாகாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மதப்படி பர்தா அணியாவிட்டாலோ, கணவனின் அனுமதியில்லாம பிற ஆண்களுடன் பேசினாலோ மனைவியை அடிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். பெண் செவிலியர்கள் ஆண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது, பெண்கள் ஆபாசமான முறையில் டி.வி விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். 120 நாட்கள் ஆன கருவை கலைத்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர். மேலும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க்கப்படும், பெற்றோர்களின் அனுமதி இல்லாமலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்வதற்காக எந்த பெண்ணாவது வற்புறுத்தப்பட்டால் வற்புறுத்தியவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும். எந்த பெண்ணும் மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டால் கட்டாயப்படுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது அந்த அமைப்பு.

ப‌ஞ்சாப் மாநில அரசுக்கு இந்த கோரிக்கைகளை அனுப்பப்படவிருக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic