கேரள மா நிலம் கோழிக்கோட்டில் பா.ஜ.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
தேசிய நிர்வாக குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்:
சிறப்பான வரவேற்பு அளித்த பா.ஜ., தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கேரளாவில் பல்வேறு தியாகிகள், ஆன்மிக குருக்கள் பிறந்துள்ளனர். இவர்களால் நமது கலாசாரம் வளர்ந்திருக்கிறது.
கேரள மக்கள் நாடு முழுவதும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். கேரளா, கடவுளின் சொந்த நாடு , இங்குள்ள தெய்வீகம், நம்பிக்கைக்கு இவர்களின் உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகின்றேன். வளைகுடா நாடுகளில் கேரள மக்கள் பங்கு போற்றத்தக்கதாக உள்ளது. அவர்களை அங்கு சந்தித்து மகிழ்ச்சி அடைந்தேன். புனிதமானவர்களை தந்தது கேரள மாநிலம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
கேரளாவில் பா.ஜ., ஆட்சி : அமித்ஷா ; இந்த கூட்டத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசுகையில்: பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 13 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி மலர்ந்திருக்கிறது. ஏழை மக்களுக்காக பா.ஜ., கூட்டணி செயல்பபட்டு வருகிறது.
கோழிக்கோடு பா.ஜ.,வுக்கு மிக முக்கியமான இடம். கேரளாவில் பா.ஜ., தொண்டர்கள் தாக்கப்படும் சம்பவம் கவலை அளிக்கிறது. வன்செயல்ககள் எங்களின் பணியை தடுத்து விட முடியாது. கேரளாவில் பா.ஜ., வளர்ந்து வருகிறது. தியாகம் மூலம் கேரளாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில்: முதலில் எங்களுக்கு தேசம் தான் முக்கியம். இரண்டாவது எங்களின் கட்சி, 3 வது தான் எங்களின் தன்னநலம் . இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் யூரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் பிரதமர் மோடி பொது நிகழ்ச்சியில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பான நேரத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.

No comments:
Write comments