சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக டி.பி.ஐ வலாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி 10ஆம் வகுப்பிற்கு தேர்வு நடைபெற்றது. இதில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். நாளை காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக விரும்புபவர்கள் மே 25 முதல் மே 28ற்கும் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments