Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 5, 2016

அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்து ஓஹியோ மாகாண ஆளுநர் ஜான் காசிக் விலகியதை அடுத்து அக்கட்சியின் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் தனித்து நிற்கிறார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன.

இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார். அவர் 52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். டெட் குரூஸ் தோல்வி அடைந்தார்.  இதனை தொடர்ந்து வேட்பாளர் போட்டியில் இருந்து குரூஸ் விலகினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ள காசிக் ஓஹியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் முன் நேற்று பேசும்பொழுது, எனது பிரசாரத்தை ரத்து செய்யும் வேளையில், எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளேன்.  கடவுள் என்னை வழிநடத்தி செல்வார்.  எனது வாழ்க்கையின் நோக்கத்தினை நிறைவேற்றுவார் என கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து குடியரசு கட்சியினை சேர்ந்த 16 பேர் வாபஸ் பெற்று கொண்ட நிலையில், காசிச் நேற்று தனது முடிவினை அறிவித்துள்ளார்.  ஓஹியோவின் ஆளுநராக 2 முறை பதவி வகித்த பெருமையை பெற்றவர் காசிச்.

இவர் மற்றவர்களை போன்று போட்டி வேட்பாளரை கடுமையாக விமர்சனம் எதுவும் செய்யாமல் மென்மையான முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.  ஆனால், டிரம்ப்பை விட அதிக ஆதரவை அவரால் பெற முடியவில்லை.

காசிச் விலகலை அடுத்து குடியரசு கட்சியின் தனித்த வேட்பாளராக டிரம்ப் போட்டியில் உள்ளார்.  அவர் வருகிற ஜூலையில் கிளெவ்லேண்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்படுவார்.  எனினும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் எச். புஷ் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ  புஷ் ஆகிய இருவரும் கலந்து கொள்ள போவதில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic