ஐ.ஆர்.சி.டி.சி இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து ஒரு கோடி பயனாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாக ஆங்கில பத்திரிகை செய்து வெளியிட்டதை தொடர்ந்து மிகப்பெரும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
இ டிக்கட் இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி இந்தியாவின் மிகப்பெரிய இணையதளமாகும். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. ஆன்லைனில் டிக்கட் முன்பதிவு செய்யும்போது மக்கள் தங்களுடைய பான் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை அதில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்தளத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற செய்தி அதன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட அந்த தகவல்களை கொண்டு போலியான ஆவணங்களை தயாரிக்க முடியும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகிறார். இணையதளத்தின் தகவல்கள் மிகவும் மதிப்புமிக்க ஆவணங்களாகும். தகவல்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் முடியும், குறிப்பிட்ட ஆட்களை இலக்காக வைத்து அவர்களுடைய தகவல்களை தவறாகவும் பயன்படுத்த முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக மராட்டிய அரசு எச்சரிக்கப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது. மராட்டிய மாநில உள்துறை கூடுதல் செயலாளர் கே.பி. பாக்ஷி மராட்டிய போலீஸ் எச்சரிக்கப்பட்டு உள்ளது என்று உறுதிபடுத்தினார். இருப்பினும் இதுதொடர்பாக முழு தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இணையதளம் ஹேக்கிங் செய்யப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., பி.ஆர்.ஒ. சந்திப் தத்தா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில், மீடியா தகவலுக்கு மாறாக இணையதளம் ஹேக்கிங் செய்யப்படவில்லை என்று கூறிஉள்ளார்.
“மூன்று நாட்களுக்கு முன்னதாக உளவுத்துறை சைபர் செல் எங்களுக்கு தெரிவித்த தகவலில் ஐ.ஆர்.சி.டி.சி. பெயரில் தகவல்கள் உலாவுவதாக குறிப்பிடப்பட்டது. நாங்கள் இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத்தோம். சைபர் செல் வழங்கிய தரவுகளின் நகலுக்காக ரெயில்வே போர்டு காத்திருக்கிறது, அதனைத் தொடர்ந்தே எங்களுடைய தரவுகள்தானா என்பதை அறிந்துக் கொள்ளமுடியும். இதுவரையில் அது நடைபெறவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இணையதளம் முற்றிலும் சரியாக இயங்குகிறது,” என்று சந்திப் தத்தா கூறிஉள்ளார்.
இ டிக்கட் இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி இந்தியாவின் மிகப்பெரிய இணையதளமாகும். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. ஆன்லைனில் டிக்கட் முன்பதிவு செய்யும்போது மக்கள் தங்களுடைய பான் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை அதில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்தளத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற செய்தி அதன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட அந்த தகவல்களை கொண்டு போலியான ஆவணங்களை தயாரிக்க முடியும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகிறார். இணையதளத்தின் தகவல்கள் மிகவும் மதிப்புமிக்க ஆவணங்களாகும். தகவல்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் முடியும், குறிப்பிட்ட ஆட்களை இலக்காக வைத்து அவர்களுடைய தகவல்களை தவறாகவும் பயன்படுத்த முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக மராட்டிய அரசு எச்சரிக்கப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது. மராட்டிய மாநில உள்துறை கூடுதல் செயலாளர் கே.பி. பாக்ஷி மராட்டிய போலீஸ் எச்சரிக்கப்பட்டு உள்ளது என்று உறுதிபடுத்தினார். இருப்பினும் இதுதொடர்பாக முழு தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“மூன்று நாட்களுக்கு முன்னதாக உளவுத்துறை சைபர் செல் எங்களுக்கு தெரிவித்த தகவலில் ஐ.ஆர்.சி.டி.சி. பெயரில் தகவல்கள் உலாவுவதாக குறிப்பிடப்பட்டது. நாங்கள் இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷனை அமைத்தோம். சைபர் செல் வழங்கிய தரவுகளின் நகலுக்காக ரெயில்வே போர்டு காத்திருக்கிறது, அதனைத் தொடர்ந்தே எங்களுடைய தரவுகள்தானா என்பதை அறிந்துக் கொள்ளமுடியும். இதுவரையில் அது நடைபெறவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இணையதளம் முற்றிலும் சரியாக இயங்குகிறது,” என்று சந்திப் தத்தா கூறிஉள்ளார்.

No comments:
Write comments