Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த பெண்


திருவனந்தபுரம்: கல்யாணக்கோலத்தில் இருந்த பணப்பெண் மணக்கோலத்தில் வாக்குச்செலுத்த வந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரத்தில் அனு என்ற பெண்ணுக்கு இன்று காலை திருமணம் நடைபெறுவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்திருந்தனர். மணமகளை அழகுபடுத்துவதற்காக பெண்கள் அழகு நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு தனக்கு நகை அலங்காரம் உட்பட அனைத்தையும் முடித்துவிட்டு, திடுதிடுப்பென அருகிலிருந்த வாக்குச்சாவடிக்கு ஓடி போய் தனது வாக்குபதிவை நிறைவு செய்தார்.

அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை நோக்கி, இது தான் எனக்கு முதல் தேர்தல் அனுபவம், எனது கல்யாணம் தேதி அன்றே தேர்தலும் வந்துவிட்டதால் வாக்களிக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது நமது முதல் வாக்கை செலுத்திவிடவேண்டும் என்பதால் ஓடோடி வந்துவிட்டேன் என வெகுளியாக தெரிவித்திருக்கிறார்.

பின்னர் அங்கிருந்த காரில் திருமணம் நடைபெறும் இடத்திற்குச்சென்றுவிட்டார். இதை அங்கு கூடியிருந்த மக்கள் இதனை வேடிக்கை பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic