இந்திய வங்கிகள் 9400 கோடி ரூபாய் கடன் வைத்டுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா திரும்பி இந்தியாவிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் முடிந்த வரையிலும், வந்த வரை லாபம் என்கிற ரீதியிலும் அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கும் பணிகளில் வங்கி மற்றும் சேவை வரி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மல்லையாவிற்கு சொந்தமான சொகுசு விமானத்தை ஏலத்தில் விட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் மே 12 மற்றும் 13 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜூன் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கின்றது. மல்லையாவின் சொகுசு விமானத்தில் சோபா, பெட், பார், குளியல் அறை போன்ற எண்ணற்ற வசதிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 இருக்கைகள் மட்டுமே கொண்ட இந்த விமானத்தின் வெளிப்புற தோற்றத்தில் மல்லையாவின் இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானம் கடந்து 3 வருடங்களாக மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழுக்கு படிந்த நிலையில் இந்த விமானம் காணப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் கோவாவில் உள்ள மல்லையாவின் சொகுசு பங்களாவை இந்திய வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏலத்துல விடுறதெல்லாம் சரி, இப்ப இத ஏலத்துல வாங்கப்போறவன் மல்லையாவைவிட கூடுதலாக வங்கிகள்ல கடன் வாங்கியிருப்பானே. அப்ப என்ன பண்ணுவீங்க...?
- புகழேந்தி

No comments:
Write comments