Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

முதல் வேலையா மதுவிலக்கை கொண்டு வாருங்கள் - சிவகுமார்


யார் ஆட்சிக்குவந்தாலும் படிப்படியாகவோ அல்லது ஒரேடியாகவோ மதுவிலக்கை கொண்டு வாருங்கள் என நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

தி நகரில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் கூறும்போது "தமிழகத்தில் கடந்த 40 வருடத்திற்குள் 1 கோடி பேரைக்குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடியால் நோயாளிகளாக இருக்கின்றனர். இப்படி குடும்பத்தலைவனை குடிகாரனாக ஆக்கிவிட்டு இலவசம் என்ற பெயரில் வாய்கரிசி போடுகிறீர்கள். யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ரு தெரியாது, யார் வந்தாலும் படிப்படியாகவோ அல்லது ஒரேடியாகவோ மதுவிலக்கை கொண்டு வாருங்கள்.

பாலியல் குற்றங்கள் தொடர்பாக பேசுகிறோமே அதற்கு முக்கிய காரணமே இந்த மது தான். எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி சாராயம் உள்ளே சென்றுவிட்டார் அசாத்தியவனாக மாறிவிடுகிறான். அவனுக்குள் இருக்கும் மிருகம் வெளியே வருகிறது. அருகில் இருப்பது தாயா, மகளா என்று கூட தெரியவில்லை அவனுக்கு. 90 வருடங்களாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் உழைத்தாரே, இப்ப அந்த சமூகம் சாராயக்கடைகள் முன் வீழ்ந்து கிடக்கிறது" இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic