Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

ஒரு பைசா லஞ்சம் வாங்கினால் கூட என் விரலை வெட்டிவிடுங்கள் - மமக வேட்பாளர்

நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி  ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கினார்ல் என் கைவிரல்களை துண்டித்துவிடுங்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செய்யது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தமிழகத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொண்டாமுத்தூரில் போட்டியிடும் செய்யது செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது, நான் போட்டியிடும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன், திராட்சை மற்றும் தென்னை விவசாயத்தை நவீனப்படுத்தப்படும், தேவையான பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் அமைக்கப்படும் என தனது வாக்குறுதிகளை தெரிவித்தார்.


கூட்டணிக்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என கேட்டதுக்கு, எதிர்பார்த்ததை விட நன்றாகவே ஒத்துழைக்கிறார்கள் என்றும், வேன் பிரச்சாரத்தை விட வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். "நான் எம்.எல்.ஏ ஆகிவிட்டால் மேஜையை தட்டும் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுக்கும் எம்.எல்.ஏ வாக செயல்படுவேன். இப்போதுள்ள காலகட்டத்தில் அரசு துறை சம்பந்தமாக எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்காமல் ஒரு காரியமும் நடக்காது. ஆனால் நான் வெற்றி பெற்றால் ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்க மாட்டேன். அப்படி நான் வாங்கிவிட்டேன் என்றால் எனது கை விரல்களை வெட்டிவிடுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் சகட்டு மேனிக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள், ஆனால் மனித நேய மக்கள் கட்சியின் இந்த வேட்பாளரின் துணிச்சல் மிக்க பேச்சு பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic