Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் அடுத்த முதல்வர் - கருணாநிதி

இயற்ககையாகவே எனக்கு ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலி தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என திமுக தலைவர் கருணாநிதி தனியார் டி.விக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் 6வது முறையாக முதல்வராகி சாதனை படைக்கவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். தான் முதல்வராக வரவேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தது இல்லை. தேர்தலில் இதுவரை நான் தோற்றதில்லை, இந்த முறையும் வென்றால், நான் 6வது முறையாக முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என நினைக்கும் முதல் ஆள் ஸ்டாலின் தான். எனக்கு இயற்க்கையாக ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார்.

தமிழகத்தில் மூன்றாவது அணியை நம்புவது எந்தவிதத்திலும் பயனளிக்காது. 3வது அணியாக இருந்த தேமுதிகவிற்கு மக்கள் ஆதரவு அளித்தனர் ஆனால் அது பல கூறுகலாக பிரிந்துவிட்டது. ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழன்னைக்கும் ரூபாய் 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் எனக்கூறினார். ஆனால் அது அமைக்கப்படவில்லை. ஊழல் தலைவர்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்தவர். அவருக்கு எதிரான எங்களது பிரச்சாரம் மக்கள் மனதில் ஆளமாக பதிந்துவிட்டது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic