இஸ்ரேல் துவங்கப்பட்ட காலம் முதல் அந்நாட்டிற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஹமாஸ் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருக்கும் காஜா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வப்போதும் பாலஸ்தீனியர்களின் பதிலடிதாக்குதல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஹமாஸ் இயக்கத்தின் ராணுவ தளத்தை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் வான்வெளித்தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலின் போது யாரும் கொல்லப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வப்போது இரு நாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தப்படுவதும் பின்பு தொடர்வது என வாடிக்கையாகிவிட்டது. ஐ. நா மற்றும் அமெரிக்க உட்பட எத்துனையோ நாடுகள் முயற்சித்தும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முடியவில்லை.
இந்த மே மாதம் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கிடையே 4 நாட்கள் தொடர்ந்து சண்டை நடைபெற்றது. இதில் இஸ்ரேலிய தரப்பில் 73 நபர்களும், பலஸ்த்தீனியர்கள் தரப்பில் 2251 நபர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments