கடந்த ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஐ. நா மன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்ற ஐ.நா சபை ஜூன் 21ஐ "சர்வதேச யோகா" தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டே யோகா கலையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நாடுமுழுவதும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். டெல்லியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதே போன்று இந்த வருடமும் நிகழ்ச்சியை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 36 ஆயிரம் நபர்கள் தாங்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமென முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் யோகா தினத்தன்று துவங்கப்படும் நிகழ்ச்சிகளை "ஓம்" என்ற மந்திரத்தை உச்சரித்து துவங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. இதை முஸ்லிம் அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. மத்திய அரசு மதச்சார்பின்மையை சீரழித்து வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

No comments:
Write comments