திருப்பூரில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரு தினமும் முன்பு 3 கண்டைனர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிப்பட்டது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்தனர். ஆனால் பணம் பிடிப்பட்டது 18 மணி நேரம் வரை யாரும் அதற்கு உரிமை கோரவரவில்லை. அதன் பின்னரே பாரத ஸ்டேட் வங்கி இது தங்களுடைய பணம் என்றும், கோவை வங்கி கிளையிலிருந்து விஜயவாடா கொண்டு செல்லவதற்காக அனுப்பப்பட்டது என்று கூறினர்.
ஆனால் அது தொடர்பான முழுமையான ஆவணங்களை பாரத ஸ்டேட் வங்கி சமர்பிக்கவில்லை. இதனால் இதில் மிகப்பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதோடு மத்திய ரிசர்வ் வங்கியின் விதியின் படி ஒரு கிளை வங்கி எந்த அளவிற்கு பணத்தை தன்னுடை கிளையில் வைத்திருக்கலாம், மற்ற கிளைகளில் ஏற்படும் பற்றாக்குறைவு போக்குவதற்கு பணம் அனுப்பப்படவேண்டுமெனில் எவ்வளவு வரை கொண்டு செல்லலாம் என ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தில் அந்த நிபந்தனைகள் ஏதுவுமே பின்பற்ற படவில்லை. ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொருக்கு கிளைக்கும் இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என முன்னால் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி கூறும்போது, இது ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கப்பட்ட வகையிலும் அதன் ஒப்புதலின் பெயரில் இது அனுப்பப்பட்டது என்று கூறுகின்றனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியும் தன்பக்கத்திலிருந்து எந்த தகவலையும் தரவில்லை. எனவே இது சட்ட விரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட பணம் தான். இது தொடர்பான முழு விசாரணை நடத்தி முடிவு தெரியும்வரை சட்டசபை தேர்தலின் முடிவை வெளியிடக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நாளை தேர்தலின் வாக்குப்பதிவு துவங்கும் நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை விரைவில் துவங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments