Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பழகிய யுவராஜ்



புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு என சில மருத்துவ குறிப்புகளை வழங்கினார் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.

இந்திய அணியின் சிறந்த வீரரும் 2007ஆம் ஆண்டு இந்தியா 20 ஓவர் உலகப்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்திலும் விளையாடி வருகிறார்.  நேற்றைய தினம் மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்த சில குழந்தைகளுடன் நேரத்தை கழித்தார். அக்குழந்தைகள் பெரும்பாலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு சிறுவன் யூவராஜை நோக்கின் நீங்க மறும்படியும் 6 சிக்ஸர்கள் அடிப்பீங்களா? என கேட்டதற்கு நிச்சயமாக அடிப்பேன், அதற்கு நீ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் வாழ்க்கையை அசாதரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, இந்த வாழ்க்கையை கடவுள் நமக்கு கொடுத்த வரமாக எடுத்துக்கொண்டு நல்லமுறையில் வாழவேண்டும் என அறிவுரை கூறினார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து மிகப்பெரும் சாதனை படைத்தார். அது நடந்து இத்துனை வருடங்கள் ஆகியும் எப்படி அதை செய்தேன் என்று இன்றுவரை யோசிப்பதாகவும் யுவராஜ் கூறினார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் கிரிக்கெட் விளையாடி வருகிறார் யுவராஜ்.

திரமையான ஆட்டக்காரர் மட்டுமல்ல‌ நல்ல பண்புள்ள மனிதர் என்பதையும் இக்குழந்தைகளுடன் நேரம் கழித்ததிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic