தமிழகத்தில் இப்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணைக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிடுகின்ற ஆர்.கே. நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 2011 ஆம் ஆண்டு அமோக வெற்றியை எனக்கு கொடுத்து எனது நெஞ்சத்தில் நீங்கா இடத்தை பெற்றுவிட்டீர்கள். நான் ஆட்சிக்கு வந்தபோது தமிழகம் மின்வெட்டு பிரச்சனையால் அவதிப்பட்டுகொண்டிருந்தது. நான் ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதியின் படி தமிழகத்தை மின்வெட்டில்லா மாநிலமாக மாற்றியுள்ளேன். தற்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னை நீங்கள் மறுபடியும் மகத்தான வெற்றியடையச்செய்ய வேண்டும். அதிமுக மீண்டு ஆட்சிக்கு வந்ததும் இன்னும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
பெண்களுக்கு 50% மாணிய விலையில் ஸ்கூட்டர், திருமண உதவித்தொகையோடு 8 கிராம் தங்கம் என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அனைத்து இலவச அறிவிப்புகளையும் கூறி தனக்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் படிப்படியாக மது விற்பனை குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். முதல்வர் பிரச்சாரம் செய்த அனைத்து பகுதிகளிலும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணைக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிடுகின்ற ஆர்.கே. நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
பெண்களுக்கு 50% மாணிய விலையில் ஸ்கூட்டர், திருமண உதவித்தொகையோடு 8 கிராம் தங்கம் என அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அனைத்து இலவச அறிவிப்புகளையும் கூறி தனக்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் படிப்படியாக மது விற்பனை குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். முதல்வர் பிரச்சாரம் செய்த அனைத்து பகுதிகளிலும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments