Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 8, 2016

உங்க ஓட்டோட மதிப்பு 87 ஆயிரம் ரூபாயாம்!

ஓட்டிற்கு 500 அல்லது 1000 கொடுத்தால் வாங்காதீர்கள். உங்களின் ஓட்டுக்கான மதிப்பு 87,210 ரூபாய் ஆகும் என அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியும், அப்துல்கலாமின் ஆலோசகராக செயல்பட்டவருமான பொன்ராஜ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் அந்த கட்சிகள் பொதுமக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்க தவறிவிட்டனர். இந்தியாவில் 8 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை, தமிழகத்தில் 36 லட்சம் பேருக்கு கிடைப்பதில்லை. இதை மக்களுக்கு கொடுக்க தவறியது அதிமுக, திமுக, மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க தான். ஒரு நபர் தண்ணீருக்காக மட்டும் 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 87 ஆயிரத்து இருநூற்று பத்து ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே அவர்கள் ஓட்டுக்காக பணம் கொடுக்கவந்தால் 87 ஆயிரம் ரூபாய் குறையாமல் வாங்காதீர்கள். அவர்களிடம் இருக்கும் பணத்தை கணக்கு போட்டால் உங்களின் ஒருவர் ஓட்டுக்கு 2 லட்சம் வரை கொடுக்கலாம். 500, 1000 என்று வாங்கி அவர்களை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். நான் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் வாங்காமல் இருக்கப்போகிறீர்களா? அல்லது அவர்கள் கொடுக்காமல் இருக்கப்போகிறார்களா? அல்லது தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணம் கொடுப்பதை தடுத்துவிடத்தான் போகிறார்களா? இதில் எதுவுமே நடக்கப்போவதில்லை. ஆகையால் உங்கள் ஓட்டையும் அரசியல்வாதிகளின் தன்மானத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்." என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic