Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

கர்கரே மீது அபாண்டமான பழியை சுமத்துகிறார்கள் - ஜூலியோ குற்றச்சாட்டு



மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2012 முதல் சிறையில் இருக்கு பெண் சாமியார் பிரக்யா சிங்கை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டதால், அவர் குற்றவாளி என்று சொல்லி அவரை கைது செய்த மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவராக இருந்த ஹேம்ந்த் கர்கரேவின் பங்கு என்ன? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. ஹேமந்த் கர்கரே கடந்த 2008ஆம் ஆண்டும் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக முன்னால் மும்பை மாநகர காவல் ஆணையர் திரு ஜூலியோ ரெபேரியோ ஆங்கில செய்தி நிருவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது,

ஹேமந்த் கர்கரே சாத்வி பிரக்யாசிங், கர்னல் புரோஹித் ஆகியோர் மீது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாக வழக்கு பதிவு செய்திருக்கிறார் என்று கூறிவருகின்றனர். இது அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள அபாண்டமான பழியாகும். அவருடைய நற்பெயருக்கு பெரும் கலங்கம் ஏற்படுத்துகிறார்கள். தன்னைத்தானே பாதுகாக்க அவர் தற்போது இல்லையென்றாலும் அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மும்பை காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் கர்கரே எவ்வளவு நேர்மையானவர் என்று தெரியும்.அவர் மீது இவ்வாறு குற்றஞ்சுமத்துவதை கேட்டு அனைவரும் வருந்துகின்றனர். பிரக்யா சிங் தாகூர் இவ்வழக்கிலிருந்து விடுவிப்பார் என்று எனக்கு முன்னரே தெரியும் காரணம், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தால் தான் கர்னல் புரோஹித்துக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை வலுவிலக்கச் செய்ய முடியும்" என்று கூறினார்.

2008ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பி 6 பேர் கொல்லப்பட்டார்கள். இவ்வழக்கை அப்போது விசாரித்துவந்த ஹேமந்த் கர்கரே அபினவ் பாரத் என்ற அமைப்பைச்சார்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் உட்பட 5 நபர்களை கைது செய்தார். பின்னர் அதே ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலின் போது தீவிரவாதிகளால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். அதன் பிறகு இவ்வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக்குழு என்.ஐ.ஏ பிரக்யா சிங் தாகூர் தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இல்லாததால் கடந்த வாரம் அவர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- புகழேந்தி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic