வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கப்போகும் ஜெயலலிதாவால் ஒருபோதும் முதலைமைச்சர் ஆகமுடியாது என பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் பா.ஜ.க வேட்பாளர் மனோகரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுப்பிரமனிய சாமி இவ்வாறு பேசினார்.
ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன்பு அவருக்கு லட்சரூபாய்கு கூட சொத்து இல்லை ஆனால் தற்போது வேட்பனு தாக்கல் செய்யும் போது தனக்கு 120 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இதனால் அவர் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெறப்போவது உறுதி, அவர் முதல்வராக ஆகப்போவது இல்லை, அவரது தோழி சசிகலாதான் முதல்வராகப்போகிறார், எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண் என்று பேசினார்.
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விடுதலை புலி ஆதரவாளர் என காங்கிரஸ் கட்சியினரே குற்றஞ்சாட்டிவருகின்றனர். ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்ப்தூரிலேயே காங்கிரஸ் கட்சி விடுதலைபுலி ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே ஊழல்தான். முக்கியமாக தண்ணீர் பிரச்சனை அதிகம் உள்ளது. வறண்ட பாலைவன தேசமான இஸ்ரேல் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் கூட 24 மணி நேரமும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
1990-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற போது கருணாநிதி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்பு அதிமுக அரசு வந்தபோது ஊழல்கள் நடைபெற்றதால் அதையும் எதிர்த்தோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஊழல் தான் காரணம். எங்கள் கட்சிக்குள்ளேயே தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விடுதலை புலிகள் ஆதரவாளர் என காங்கிரஸ்காரர்களே கூறி வருகின்றனர். அப்படி இருக்கையில், விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி உயிர்நீத்த இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் விடுதலை புலிகளின் ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால் வறண்ட பாலைவன நாடுகளான இஸ்ரேல், சவுதி போன்ற நாடுகளில் 24 மணி நேரமும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஊழல். தமிழகத்தில் உள்ள கடற்கரை மணலில் அதிகஅளவில் தோரியம் உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு தேவை அடிப்படை வசதி, ஆனால் டி.வி, மிக்ஸர், குக்கர், ஸ்கூட்டர் கொடுப்பதெல்லாம் உங்களிடமிருந்து எடுக்கப்படும் வரிப்பணம்தான். அம்மா உணவகம், அம்மா ஸ்கூட்டர், அம்மா பள்ளிக்கூடம் போல அம்மா ஜெயிலும் விரைவில் கிடைக்கும் என்று பேசினார்.

No comments:
Write comments