Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 8, 2016

பாடப்புத்தகத்திலிருந்து ஜவர்ஹலால் நேரு வரலாறு நீக்கம்

ராஜஸ்தான் மாநில கல்வித்துறையின் 8ஆம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடபுத்தக்கத்திலிருந்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது பாடபுத்தக்கத்தில் விளக்கப்படவில்லை. ஆனால் புத்தகம் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்றும் அரசு கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அப்பாடபுத்தகத்தில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வீர் சாவர்க்கர், பகத்சிங், லாலா லஜபதி ராய் மற்றும் பால கங்காதர் திலக் ஆகியோரது வரலாறுகள் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் ஏற்கனவே இடம்பெற்றிருந்த ஜவஹர்லால் நேருவின் மற்றும் இன்னபிற காங்கிரஸ் கட்சியின்  சுதந்திர போராட்ட வீரர்கலின் பெயர் மற்றும் விபரங்கள் விளக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது இவ்விவகாரத்தில் தானோ மாநில அரசோ செய்வதற்கு எதுவும் இல்லை, தான் இதுவரை அப்புதிய பாடபுத்தகத்தினை பார்க்கவில்லை. பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒரு தன்னாடி அமைப்பால் உருவாக்கப்படுகிறது, மாநில அரசு இதில் தலையிடாது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய வாசுதேவ் தேவ்னானி, அரசு பாடபுத்தகங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றில் மாற்றம் கொண்டுவரப்படும், மாணவர்களுக்கு தேசப்பற்று உணர்வு கற்பிக்கப்படும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic