Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 26, 2016

இந்தோனேஷியாவில் கற்பழிப்புக்கு இனி மரண தண்டனை




நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு இனி மரணதண்டனை வழங்கப்படும் என இந்தோனேஷியா அதிபர் ஜொகோவி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மேற்கு இந்தோனேஷியாவில் 14 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் வலுத்துவந்தது. 2002ஆம் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் அதுவும் சிறுமிகளை கற்பழிப்பவர்கள் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

இருந்த போதிலும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் குற்றவாளிகள் தப்பிப்பதும் குற்றங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதனை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அந்நாட்டு அதிபர் ஜொகோவி தெரிவித்துள்ளார்.

இதனையெடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் கெமிக்கல் மூலம் ஆண்மை நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும், சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் குற்றங்களும் குறைவதோடு பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறைந்த அளவு மன நிறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு என சமூக விவகாரத்துறை அமைச்சர் கோபியா இன்டர்பரவன்சா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு இந்தோனேஷியாவாகும். இது போன்ற கடுமையான சட்டங்கள் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே இங்குள்ள பெண்கள் அமைப்பு உட்பட ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பு.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic