மத்திய மற்றும் தெற்கு ஆசியா நாடுகளின் அமெரிக்க தூதர்களின் துணைச்செயலாளரான தெசாய் பிஸ்வல் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் குழு கூட்டத்தில் பேசும்பொது "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நல்லுறவு இருந்துவருகிறது. இந்தியாவின் அனுமதியோடு அங்கு நடைபெறும் பண பரிவர்த்தங்களை தீவிரமாக அமெரிக்கா கண்காணித்து வருகிறது. அதில் தீவிரவாத செயல்களுக்காக எதுவும் பரிவர்த்தனைகளை நடைபெறுகிறாதா என்பதனையும் கண்காணித்து வருகிறோம். அதே சமயம் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தீவிரவாத எதிர்ப்பு போக்கையே கையாண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தீவிரவாத குழுக்களால் இந்தியாவில் கால் பதிக்க முடியவில்லை என்கிற செய்தி நமக்கு கிடைத்துள்ளது என அக்குழுவின் தலைவர் கிர்ஸ் மோர்பி கேட்டதற்கு பதிலளித்தார் தெசாய். அரபு நாடுகளில் கோடிக்கணக்கில் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறதே, பள்ளிகள் கட்டுவதற்கும் மதரஸா கட்டுவதற்கும் சவுதி அரசாங்கம் நிறைய உதவி செய்துவருவதாக நமக்கு செய்தி கிடைத்துள்ளதே அது தொடர்பாக உங்களிடம் உள்ள தகவல் என்ன? என மோர்பி கேட்டதற்கு, அமெரிக்கா அத்தகைய முதலீடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவோடு நல்லுறவு இருந்து வருகிறது, அதோடு இந்திய அரசாங்கமும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது என செனட் சபையில் தேசாய் தெரிவித்தார்.

No comments:
Write comments