சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை வாசிகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணித்துவிட்டதால் சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாளை தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து குஷியான பலரும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். இதற்காக சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துவிட்டதால் ஓட்டுபோடுவதற்கென்று சிலரும், விடுமுறையை கொண்டாடுவதற்கென்று பலரும் சென்னையைவிட்டு சொந்த ஊருக்கு பயணித்துவிட்டதால் சென்னை சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மப்சல் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இல்லை, சாலைகளில் போக்குவரத்து நெரிச்சல் இல்லை, சினிமா அரங்குகளில் கூட்டம் இல்லை என வித்தியாசமான சென்னையை பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணையம் இம்முறை 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறது. இதனால் இம்முறை வாக்குப்பதிவின் சதவிகிதம் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

No comments:
Write comments