Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

தேர்தல் ஆணையம் வெறும் அட்டைக்கத்தி தானோ...?

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து வாக்குப்பதிவு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்று வரை மாநிலத்தின் அனைத்து நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்வது வாடிக்கை. அப்படி அதிகாரத்தை தன் வசப்பட்டுத்திக்கொள்ளும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்திற்கு தகுந்தார்போல் நடவடிக்கைகளில் இறங்குமா? என்பது கேள்விக்குறிதான்.

தமிழகத தேர்தலில் பல கிடுப்டிகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தும் அதை அனைத்தையும் மீறி பல கட்சிகள் செயல்பட்டதும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறியதை பார்க்குபோதும் போது தற்காலிகமாக தேர்தல் ஆணையம் எடுக்கும் இந்த அதிகாரம் என்பது கையாலாகாத ஒன்று தான் என்று தெரிகிறது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார செலவாக சில லட்சங்களைத்தான் செலவு செய்ய வேண்டும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் வாகன பிரச்சாரத்திற்கு முன்கூட்டியே தாங்கள் பிரச்சாரம் செய்யும் சரகத்திற்கு உட்பட்ட காவல்நிலையத்தில் முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்கியிருக்க வேண்டும், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, வாக்காளர்களுக்கு பணமாகவோ பரிசு பொருட்களாகவோ எதையும் கொடுக்க கூடாது, தேர்தல் வாக்குறுதிகளில் இலவச வாக்குறுதிகள் எதையும் அறிவிக்கக்கூடாது என ஏகப்பட்டன் கண்டிஷன்களை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. ஆனால் பல இடங்களில் இவை அனைத்துமே மீறப்பட்டிருக்கிறது. உப்புச்சப்புக்காக சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போதிலும் இதற்காக நடவடிக்கை எந்த வகையில் இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

வழக்குதொடரப்பட்ட வாக்காளர், முதலைமைச்சர் ஆகிவிட்டாலோ, அல்லது மந்திரி ஆகிவிட்டாலோ ஏன் குறைந்த பட்சம் எம்.எல்.ஏ ஆகிவிட்டாலோ தேர்தல் ஆணையத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு தூசிபிடித்து கரையான் அரித்து போகுமே தவிற விசாரணையை கூட எட்டாது என்பதே எதார்த்தமான நிலை. இந்தியாவில் பல நல்ல சட்டதிட்டங்கள் இருந்தாலும் அது நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே ஒரு நல்ல ஆட்சியாக அமையும். வெறும் காகிதத்தில் இருப்பதால் யாருக்கும் எந்த பலனும் கிட்டிவிடாது.

- புகழேந்தி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic