Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

நாங்க கேட்குறது என்னான்னா...?

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் என்னவோ நேற்றோடு ஓய்ந்து போய்விட்டது என்றாலும் சில அரசியல் வாதிகள் விட்ட வாய்ச்சவடால்கள் நம் தூக்க்கத்தை தொலைத்துவிட்டது. நீங்க என்னவேனாலும் பேசுவீங்க அத நாங்க கேட்டுப்புட்டு கைதட்டனுமா? என்று மக்களில் ஒரு சாரார் கேட்கின்றனர்.


அந்த வகையில் தற்போது சிக்கியுள்ள அரசியல் தலைவர் வேறு யாரும் அல்ல, திமுக வின் தளபதி, முன்னால் மேயர், முன்னால் துணை முதல்வர், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் (நாளை என்னவோ தெரியாது) சாட்சாத் நம்ம ஸ்டாலினே தான்!

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு இறுதியாக தான் போட்டியிடுகின்ற சென்னை கொளத்தூர் தொகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரு கடைசியா அடிச்ச டயாக் என்னான்னா... "234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதியை முதல் தரம் வாய்ந்த தொகுதியாக மாற்றுவேன்" அப்படின்னு சொன்னார். அதோடு மட்டுமல்லாமல் வழக்கமா அரசியல்வாதிங்க அடிக்கிற டயலாக் ஆன " நான் உங்க வீட்டு பிள்ளை..." அப்படி இப்படின்னு பேச்சு ஒடிச்சு.

இப்ப மக்கள் என்ன கேட்குறாங்கன்னா... போன வாட்டி தேர்தல்ல போட்டியிடும்போதும் கொளத்தூர் தொகுதியை முன்னேற்றுவேன்னு சொன்னீங்க, அதுக்கு முன்னாடி ஆயிரம் விளக்கு தொகுதில ஜெய்க்கிறதுக்கு முன்னாடியும் இதையே சொன்னீங்க. இப்ப எங்களுக்கு என்னா டவுட்டுன்னா? நீங்களே இதுக்கு முன்னாடி ஜெயிச்சிருந்த தொகுதிகளில நம்பர் ஒன் தொகுதி எது? ஆயிரம் விளக்கா? கொளத்தூரா?

இந்த கேள்வி ஏற்கன்வே ஜெயிச்சு மீண்டு வாய்ச்சவடால் விடும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic