Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

ராஜஸ்தானில் நேருவை தொடர்ந்து ஆர்.டி.ஐ தொடர்பான பாடங்களும் நீக்கம்



ஜெய்பூர்: பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநில கல்வித்துறையின் சார்பில் 8ஆம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து ஆர்.டி.ஐ (RTI ) தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முந்தைய கல்வியாண்டில் ஆர்.டி.ஐ தொடர்பான பாடங்கள் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தக்கத்தில் பக்கம் 105ல் இடம்பெற்றிருந்தது. அதில் ஆர்.டி.ஐ தொடர்பான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. மேலும் அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவருதற்காக பாடுபட்டவர்கள் குறித்தும் விரிவாக தெரிவிக்கபப்ட்டிருந்தது. தற்போதுள்ள கல்வியாண்டில் வெளியிடப்பட்டிருக்கும் புத்தகத்தில் ஆர்.டி.ஐ தொடர்பான அனைத்தும் நிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்பான வரலாற்று செய்திளும் நீக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கடந்த மாதம் வெளியானது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் கூறும்போது இதற்கும் மாநில அரசிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

மஜ்தூர் கிசான் சக்தி சங்கதன் சார்பில் கூறும்போது "ஆர்.டி.ஐ சட்டம் நாட்டிற்கு பெருமை சேர்த்த ஒன்றாகும். ஒரு சாமானிய மனிதனால் எந்த ஒரு செய்தியையும் பெற முடியும் என்கிற அளவிற்கு இந்தச்சட்டம் வழிவகை செய்கிறது. தற்போது இந்த பாடத்தை ராஜஸ்தான் அரசு நீக்கியுள்ளது. இதற்கு அரசியல் பின்புலமே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றுவதில் தவறில்லை அதே சமயத்தில் வரலாற்றை திரிப்பற்கோ அல்லது மறைப்பதற்கோ மாற்றப்படுமேயானால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவ்வமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic