குறள்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள்:
அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர். ஆனால் அன்பு உள்ளம் கொண்டவரோ, தம் எலும்பையும் கூடபிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.
ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் அபூர்வமாக சில அனுபவமுள்ள, மக்களில் ஒருவரான ஒரு தலைவனை காணமுடியும்.
அறிஞர். அண்ணா, காயிதே மில்லத் முகமது இஸ்மாயில், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி இன்று தொல். திருமாவளவன் வரை அதற்கு தமிழகத்தில் நிறைய உதாரணங்கள் உண்டு.
சமீப காலங்களில் யாரையும் சிறிதளவு கூட கடுஞ்சொல்லில் விமர்சிக்காமல், இக்காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அரசியல் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் பேசி. சாதி மதம் பாராமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களுக்கான உரிமையை பெற்றுத்தரும் தலைவானாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் திகழ்கிறார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழகத்தில் சாதிய கொலைகளும் அட்டூழியங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி சொன்னது இன்னும் தமிழகத்தில் மெய்ப்படவில்லை எனினும். விபத்துக்குள்ளாகி நடுவீதியில் உயிருக்கு போராடுபவன் எந்த மதம் எந்த சாதி என்றும் பாராமல் அவர்களது உயிரை காப்பாற்றியவர்.
கூட்டணி கட்சி தலைவர்கள் மற்ற கட்சித் தலைவர்களை தாறுமாறாக விமர்சித்த போது அதையும் கண்டித்த நல்லதோர் பண்பான தலைவனாகவே திருமாவளவன் திகழ்கிறார்.
பிறர் தன்னை அநாகரீகமாக சாதி பெயர் சொல்லி விமர்சித்த போதும் கூட புன்னகையுடன் அதை கடந்து சென்ற காரணத்தினாலோ என்னவோ அரசியலையும் தாண்டி அணைத்து தரப்பு மக்களின் ஆதரவும் இவருக்கு இருப்பதாகவே தெரிகிறது.
ஆக்கம் :: சாஹிப்...


No comments:
Write comments