Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 5, 2016

ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் ஊடகங்கள்

தொழிற்நுட்பம் உச்சக்கட்ட வளர்சியை அடைந்துள்ள இக்காலகட்டத்தில் உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் மக்களுக்கு உடனுக்குடனே அத்தகவலை கொண்டு வருவதில் ஊடகங்கள் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வாழும் தேசமாகும். இங்கே ஊடகங்களில் வரும் செய்திகள் சரியானதுதானா? என்று ஆராய்சி செய்து நம்பக்கூடியவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருக்கின்றார்கள். பெரும்பாலானவர்கள் அதில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடுவது தான் அதிகளவில் இருக்கிறது.

தற்போது நடைபெற்று வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தின் யுக்தியாக எல்லா கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை ஊடகங்கள் வாயிலாகவும் மேற்கொண்டு வருகிறதை காணலாம். நாளிதழ்கள் வாயிலாகவும், ரேடியோக்கள் மூலமாகவும் விஷுவல் சேனல்கள் என்று சொல்லக்கூடிய டி.விக்கள் மூலமாகவும் மேற்கொண்டு வரப்படும் பிரச்சாரங்களுக்காக செலவிடப்படும் தொகைகளை கணக்கிட்டு பார்க்கும்போது இத்துனை கோடிகளை இவர்கள் செல்வழித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் சாமான்ய மக்களின் துயர் துடைக்கும் பணிகளை ஒருபோதும் இவர்கள் செய்யமாட்டார்கள் மாறாக தாங்கள் முதலீடு செய்த அந்த தொகைக்கு லாபம் ஈட்டும் வாய்பாகவே வருகின்ற 5 ஆண்டுகளை உபயோகப்படுத்துவார்கள் என்பது நிதர்சனம்.

உதாரணம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற விஷுவல் மீடியாவான ஒரு தொலைகாட்சி ஒரு சில நொடிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களுக்கு வாங்கும் தொகை மட்டுமெ பல ஆயிரங்களை தாண்டும். அதே விளம்பரங்கள் ஒரு மணி நேரத்திற்கு 4 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு நாள் ஒன்றுக்கு 96 தடவை அவ்விளம்பரங்கள் ஒளிபரப்பாகிறது. ஒரு பேச்சுக்கு மிகக்குறைவாக கணக்கிட்டு பார்த்து ஒரு முறை ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கான மதிப்பு 40 ஆயிரம் எணில் நாள் ஒன்றுக்கு அக்கட்சி அந்த ஊடகத்திற்காக கொடுக்கும் மொத்த மதிப்பு சராசரியாக 38 லட்சம் ஆகும். அதே போன்று பல கட்சிகளும் அதே ஊடகங்களை நாடுகின்றன. இப்படியாக ஒரு கட்சி பல ஊடகங்களிலும் தினம்தினம் தங்களது விளம்பர செலவுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நடுநிலை ஊடகங்கள் என்று தெரிவித்துக்கொண்டு எல்லா கட்சிகளின் விளம்பரங்களை பெற்றுக்கொண்டு தங்களது மார்கட்டை உயர்த்துவதோடு கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பதை தவிற மக்களுக்கு எதார்தத்தை விளக்குவது என்ற திசையை விட்டு விலகி சென்றுவிட்டதாகவே கருதுகிறேன். இதனை காணும் சாமான்ய மக்கள் இந்த விளம்பரங்களை கண்டு அதனை நிஜம் என கருதி மீண்டும் ஏமாறுவதற்கே தயாராகிறார்கள்.

இதனையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் மாத்திரம் அல்ல இந்தியா முழுவதும் யார் ஆட்சி அமைக்கவேண்டும் எந்த கட்சியை ஆட்சிக்கட்டிலிருந்து வீசி எறிய வேண்டும் என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு பணநாயகம் ஆட்சியைப்பிடிக்கிறது என்பதே எதார்த்தம்.

முத்து

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic