மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணியை 6 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது இடத்துக்கு முன்னேறியது.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வீராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கும் விராட் கோல் இப்போட்டியில் சொற்ப ரன்னிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கிந்திய தீவு அணியின் கெய்லும் சீக்கிரம் பெவிலியன் திரும்ப தொடக்கத்தில் சற்றே தடுமாறியது பெங்களூர் அணி,
இருந்த போதும் ராகுலின் அபாரமான ஆட்டத்தால் 151 ரன்களை எடுத்தது. ராகுல் 68 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி. இந்த அணி தரப்பில் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பெங்களூர் அணி இனி தான் விளையாவிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

No comments:
Write comments