Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

கொஞ்சம் சிந்திச்சுத்தான் பார்போமே...!



எனக்கு ஒரு சின்ன டவுட்டு  மட்டும் கிளியர் பண்ணு. சரியா. தம்பி....???

"சொல்லுங்ணா...!"

"சோழிங்க நல்லூர் தாண்டி ரெண்டு ஏக்கர் தோட்டம் வச்சிருக்க இல்ல.....? அதுல நெறைய வருமானம் வருதா.... ?"

"வருதுண்ணா.... நல்ல வருமானம் வருஷம் முழுக்க வருதுண்ணா!"

"சரி,... பாத்துக்க ஆளு இருக்கா?"

"இருக்காங்கண்ணா,.. ஒரு கூர்க்கா குடும்பம் தங்கியிருக்காங்க." “அவ்வளவு தள்ளி இருக்கிறதால பாத்துக்க ஆளு கெடைக்கிறதுதான் கஷ்டமா இருக்கு!”

"ஒரு பேச்சுக்கு சொல்றேன். அந்த கூர்க்கா உனக்குத் தெரியாம தோட்டத்துல வெளையரத வித்தா என்ன செய்வ?"

"வேலைய விட்டுத் தூக்கிருவெண்ணா... "

"சரி, அடுத்த கூர்க்காவும் அப்படி செய்யறான்னு வச்சுக்க,...!"

"அவனையும் தான்,.. நமக்கு நேர்மை இல்லாதவனுங்க தேவையே இல்லை..."

"சரி,. அந்த ரெண்டாவது ஆளையும் தூக்கிட்ட.. வேற கூர்க்கா யாரும் கிடைக்கல. அந்த மொத கூர்க்காவே வந்து திரும்ப வேலை கேக்கறான். அந்த ரெண்டாவது கூர்க்கா மாதிரி செய்ய மாட்டேன். என்னை வேலையில எடுத்துக்குங்க ன்னு சொல்றான். எடுத்துக்குவியா?

"அது எப்படிங்கண்ணா. அவன் ஏற்கெனவே திருடன். அவன் திருந்தியிருப்பான்னு எப்படித் தெரியும். இன்னமும் அதிகமா ப்ளான் பண்ணித் திருட மாட்டான்னு எப்படி நம்பறது?"

"ரொம்ப கரக்டா சொல்ற. சரி, இந்த ரெண்டு பேரு தவிர வேற தெரிஞ்சவங்க யாரும் இல்லை.  அந்த நேரத்துல வேற புது ஆளு ஒருத்தன் வேலை கேட்டு வர்றான். அவன் ஓரளவு நல்ல கூர்க்காவா இருக்காங்கன்னு சொல்றாங்க.
அவனும் நம்பிக்கை வருவது போல் பேசுகிறான்.
போன் நம்பர் எல்லாம் கூட குடுத்து பேசி தெரிஞ்சுக்க சொல்றான். அவனை வேலைக்கு எடுப்பியா?"

"வேற என்ன அண்ணா செய்யறது.! கொஞ்சம் விசாரிச்சிட்டு, வேலைக்கு எடுத்துக்க வேண்டியதுதான். அந்த ரெண்டு பேரு கொணமும்தான் தெரிஞ்சிருச்சே!"

“அதத் தானப்பா இந்தத் தேர்தல்ல கூட செய்யச் சொல்றேன். போயி, நல்லா யோசிச்சு, ஓட்டு போடு சரியா???

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic