கட்சியினர் அள்ளிவிடும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றக்கூடாது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
இளைஞர் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது, அரசியலில் ஊழல், லஞ்சம் ஆகியவை இளைஞர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் கருவிகள். நல்ல தலைவர்களை தேர்வு செய்ய தேர்தல் ஓர் நல்ல வாய்ப்பு. ஓட்டுக்களை விற்பது சமூக விரோதம். கட்சியினர் அள்ளிவிடும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறக்கூடாது. அவற்றை அலசிப்பார்க்கும் மன நிலை மக்களுக்கு வேண்டும். தெளிவான சிந்தனை உள்ள நல்ல தலைவர்களை தேர்வு செய்தால்தான் நாடு முன்னேற்றபாதையில் செல்லும். பணம் வாங்கி ஓட்டுப்போடும் பழக்கம் வேண்டாம். இந்த மாற்றம் ஒவ்வொரு குடிமகன்களிடம் இருந்தும் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments