Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 8, 2016

அதிமுக அரசை தோற்கடிக்க வெறியில் இருக்கும் விஜய் ரசிகர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக அரசு விஜய் நடித்த படங்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததால் அரசிற்கு பாடம் புகட்டும் வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க விஜய் மக்கள் இயக்கம் முடிவெடுத்துள்ளது.


தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என‌ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் விஜய் படம் வெளியாகும் நேரத்தில் தேவையில்லா இடையூறுகளும், சச்சரவுகளும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது. இதனால், இந்த சட்டசபை தேர்தலில் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பில்லா ஜெகன். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. இதனால் அதிமுக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஓடோடிச் சென்று ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக அரசு 2011 முதல் 2016 வரையிலான விஜய் படங்களை வெளியிட தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.


எனவே 2016 சட்டசபைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்" என்றார். இந்தக் கூட்டத்திற்குப் பின் பில்லா ஜெகன் தலைமையில் விஜய் ரசிகர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து, சால்வை அணிவித்து அவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேசமயம், இந்தத் தேர்தலில் தனது ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் ஏற்கனவே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த ரசிகர்களின் முடிவில் விஜய்க்கு சம்மதமா என்பது தெரியவில்லை.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic