Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் அட்டூழியம்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஈராக்கில் அமெரிக்க படையினருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருக்குமிடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது கொடூர தாக்குதல்களை ஐ. எஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள். ரமாடி என்னும் இடத்தில் திவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரமாடி அருகே 10 கி.மீ தொலைவில் உள்ள ஐராசி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். எதிர்பாராத நேரத்தில் ராணுவ முகாமை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் தீவிரவாதிகள். மேலும் வெடிகுண்டு நிரப்பிய காரை முகாம் மீது மோதச்செய்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் முகாம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது அப்பகுதியிலுள்ள முக்கிய பாலத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி வழியை அடைத்துள்ளனர். அதை தொடர்ந்து அமெரிக்க படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை விரட்டி அடித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ரமாடி பகுதி சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கவே இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாக்தாத் பகுதியில் நடைபெற்ற மேலும் இரண்டு தாக்குதலில் 2 போலீஸார் உட்பட 80ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic