திருப்பூர் அருகே மூன்று கன்டைனர் லாரிகளில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் இதுவரை யாரும் உரிமை கோராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் நேற்று இரவு 12 மணியளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படையினர் வாகன சோதனியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருன்டு வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்த முயன்றபோது லாரிகள் நிக்காமல் சென்றதால் விரட்டிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 லாரியிலும் சேர்த்து 570 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. விசாரித்த போது கோவையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு எஸ்.பி வங்கிக்காக பணம் கொண்டு செல்வதாக கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.
விடிந்த பிறகும் அப்பணத்திற்கு யாரும் உரிமை கோராததால் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே வங்கி பணத்தை கொண்டு செல்வதென்றால் ஏன் ஆவணம் இல்லாம கொண்டு செல்லவேண்டும்? அதிகாரிகள் சோதனைக்காக நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் ஏன் செல்லவேண்டும்? வங்கியோட பணம் என்றால் ஏன் உரிய ஆவணங்களை இதுவரை ஒப்படைத்து பணத்தை பெற்றுகொள்ள முன்வரவில்லை? போன்ற கேள்விகளுக்கு விடைகிடைக்காததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.
வருமான வரித்துறையினர் உஷார்படுத்தப்பட்டு இது தொடர்பான முழு விசாரணையில் இறங்கியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பறக்கும் படையினர் 3 லாரிகளையும் கண்காணித்துவருகின்றனர். சில்லறை சில்லறையாக ரூபாய் 100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தில் ஒரே நாளில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் நேற்று இரவு 12 மணியளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படையினர் வாகன சோதனியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருன்டு வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்த முயன்றபோது லாரிகள் நிக்காமல் சென்றதால் விரட்டிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 லாரியிலும் சேர்த்து 570 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. விசாரித்த போது கோவையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு எஸ்.பி வங்கிக்காக பணம் கொண்டு செல்வதாக கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறையினர் உஷார்படுத்தப்பட்டு இது தொடர்பான முழு விசாரணையில் இறங்கியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பறக்கும் படையினர் 3 லாரிகளையும் கண்காணித்துவருகின்றனர். சில்லறை சில்லறையாக ரூபாய் 100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தில் ஒரே நாளில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments