2006ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 7 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்ததாக்குதலை விசாரித்த மும்பை தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் ஹேம்ந்த் கர்கரே பிரக்யா சிங் தாக்கூர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். 2008ஆம் நடந்த தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதலில் ஹேம்ந்த் கர்கரே கொல்லப்பட்டதால், 2011ஆம் ஆண்டு முதல் இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ அதில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை சேர்க்கவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இல்லாத அவரின் பெயரை நீக்கிவிட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்தது. மத்திய அரசின் தூண்டுதலால்தான் என்.ஐ.ஏ இவ்வாறு செயல்படுகிறது. என்.ஐ. ஏ சுதந்திரமாக செயல்படவில்லை என காங்கிரஸ் கட்சி உட்பட எல்லா எதிர்கட்சிகளும் கண்டித்தன. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது என்.ஐ.ஏ விசாரணையில் மத்திய அரசின் எந்த தலையீடும் இல்லை, இது மத்திய அரசின் மீது அபாண்டமான பழியை சுமத்த நினைக்கிறார்கள். என்.ஐ.ஏ உட்பட அனைத்து மத்திய விசாரணைக்குழுக்களும் சுயமாகவே இயங்குகின்றன என அவர் தெரிவித்தார்.
அதே சமயம் பா.ஜ.க தலைவர்களுக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூருக்கு ஏற்கனவே நெருக்கிய தொடர்பு இருப்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments