Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 12, 2016

உ.யில் துவங்கிய பா.ஜ.கவின் 2 நாள் செயற்குழு கூட்டம்

 
உத்தரபிரதேசம் அலஹாபாத்தில் பா.ஜ.கவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது. பிரதமர் நரேந்தி மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்கு தலைமைவகிக்கின்றனர்.

பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு உத்தரபிரதேசம் மாநிலம் அலஹாபாத்தில் துவங்கியது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் இந்த செயற்குழு கூட்டம் நாளை வரை நடைபெறுகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள், பிரச்சார வியூகங்கள் குறித்தும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது.

அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் முதல்வர் வேட்பாளராக ஒருவரை அறிவித்து தேர்தல் களத்தை மேற்கொள்வதற்காக திட்டங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியின் பெயர் அதிகளவில் பேசப்படுகிறது. நாளை இறுதியில் பெரும் பொதுக்கூட்டம் ஒன்றிர்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று தெரிகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic