Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 12, 2016

ஹிந்து அமைப்பை தடை செய்ய பா.ஜ.கவிற்கு நெருக்கடி

 
பிரபல சமூக ஆர்வளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய ஹிந்து அமைப்பான சனாதன சாஸ்தா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மஹாராஷ்டிரா மற்று கோவா பா.ஜ.க அரசுகளுக்கு எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு சமூக ஆர்வளரான நேரேந்திர தபோல்கள் புனேயில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை அவரை சுட்டுகொன்றனர். 2014 ஆம் ஆண்டு வரை இவ்வழக்கை விசாரித்து வந்த புனே காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சனாதன சாஸ்தா என்னும் ஹிந்து அமைப்பைச்சேர்ந்த வீரேந்திர தாவ்டே என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சனாதன சாஸ்தா அமைப்பினர் மீது இக்கொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவ்வமைப்பைச்சேர்ந்தவரே கைது செய்யப்பட்டிருப்பதால் மஹாராஷ்டிரா மற்றும் கோவாவில் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என எதிர் கட்சிகள் பா.ஜ.க அரசிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மகாராஷ்டிராவின் காங்கிரஸ் தலைவர் சி.எம். அசோக் செளகான் கூறும்போது "காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கோரியிருந்தோம். இவ்வழக்கில் சனாதன சாஸ்தாவின் தொடர்பு தற்போது உறுதியாகியுள்ளது. இந்த அமைப்பை காலதாமதமின்றி உடனடியாக தடை செய்யவேண்டும். இந்த அமைப்பும் அதன் செயல்பாடுகளும் நாட்டிற்கு பெரும் ஆபத்து" என்றார்.

இவ்வழக்கில் அவ்வமைப்பின் தொடர்பு குறித்து உறுதியான ஆதாரம் கிடைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னர் உறுதியளித்திருந்தது பா.ஜ.க அரசு. மஹாராஷிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் "உறுதியான ஆதாரம் கிடைக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க எனது அரசு தயங்காது, அரசு இது தொடர்பான விசாரணையில் சிபிஐக்கு ஆதரவாக இருக்கும், இவ்வழக்கு தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்" என்று முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் ஹிந்து அமைப்பை தடை செய்வதற்கான எந்த கோரிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic