தமிழ் திரையுலக பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். இறுதிச்சட்டங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு மாதகாலமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரலில் செயல் திறன் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் தாம்பரம் அடுத்துள்ள பொழிச்சலூரில் பஜனை கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பா.ம.க கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று மலர் வலையம் வைத்து ஆஞ்சலி செலுத்தினார்.
ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


No comments:
Write comments