மக்கள் தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் "தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியையும் தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதையே கடந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கிறது. எங்களை கடனாளியாக்கிவிட்டு தன்னை மட்டும் வளமாக ஆக்கிக்கொண்டார் விஜயகாந்த். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் தங்களது சொத்து, வீடு என அனைத்தையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டர்கள். 10% இருந்த வாக்கு வங்கியை 2.4% ஆக ஆக்கிவிட்டார். அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே அவரால் டெபாசிட் வாங்க முடியாமல் போய்விட்டது. மக்கள் விஜயகாந்தை நிராகரித்துவிட்டனர். இதற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார். எல்லாம் தெரிந்தும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டார். அவருக்கு 700 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அதனால் தான் கட்சியை அடமானம் வைக்க தயங்கவில்லை. அடுத்த தேர்தலில் தேமுதிக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும். அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளன. இன்னும் சில நாட்களில் அவர்கள் அனைவரும் அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள்" இவ்வாறு சந்திர குமார் தெரிவித்தார்.
மக்கள் தேமுதிக கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் ஐக்கியமாவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து விருப்பத்தை தெரிவிக்க உள்ளோம். அவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி திமுகவில் ஐக்கியமாகிவிடுவோம் என சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
No comments:
Write comments