Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 28, 2016

பசு மூத்திரத்தின் மூலம் தங்கம் எடுக்கலாம் - குஜராத் வேளான்மை கழகம்


குஜராத்தில் காணப்படும் பசு வகைகளில் ஒன்றான கிர் பசுவின் ஹோமியத்திலிருந்து தங்கம் எடுக்கலாம் என அம்மாநிலத்தில் இயங்கி வரும் ஜுனகத் வேளான்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

4 வருட தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வந்ததை அடுத்து பசு ஹோமியத்தில் தங்கத்தின் மூலப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். 400 பசுக்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் ஒரு லிட்டர் ஹோமியத்திலிருந்து 3 முதல் 10 மி.கிராம் வரையிலான தங்கத்தின் மூலப்பொருட்களை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் பி.ஏ. கோலாக்கியா, கிரோமடேகிராபி முறையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார். அவர் கூறும்போது; “இதுநாள் வரை பசுவின் ஹோமியத்தில் தங்கம் இருக்கிறது என்பதை புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால் இதை நிரூபிப்பதற்காக யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுத்ததில்லை. எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ச்சியில் இறங்கியபோது பசு ஹோமியத்தில் தங்கத்தின் மூலப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.” என்றார்.

இரசாயன செயல்முறை மூலம் ஹோமியத்திலிருக்கும் தங்கத்தின் மூலப்பொருட்களை தனியாக பிரித்து அதனை திடப்பொருளாக மாற்ற முடியும். ஒட்டகம், எருமை மாடுகள், செம்மறி ஆடுகள் போன்றவற்றின் ஹோமியத்தையும் நாங்கள் பரிசோதித்தோம். ஆனால் நோய் எதிர்ப்பு சக்திக்கான எந்த ஒரு கூறும் அதில் இல்லை. அதே சமயத்தில் கிர் பசுவின் ஹோமியத்தை பரிசோதித்தபோது அதில் 388 வகைகயான நோய் எதிர்பு சக்திகளுக்கான மருத்துவ குண நலன்கள் இருப்பதை கண்டுபிடித்தோம். மனிதர்களின் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகள் அதில் இருக்கின்றன. மேலும் இந்தியாவில் இருக்கும் மற்ற பசுவகைகளின் ஹோமியங்களையும் பரிசோதனை செய்யவிருப்பதாக கோலாகியா தெரிவித்தார்.

ஜுனகத் வேளாண்மை பல்கலைகழகம் (ஜே.ஏ.யு)வின் உணவு பரிசோதனை கூடம் தேசிய வேளான்மைக் கழகம் (என்.ஏ.பி.எல்)த்தின் அங்கீகாரம் பெற்றது. ஆண்டு ஒன்றுக்கு 50,000 க்கும் மேற்பட்ட சோதனைகளை குஜராத்தில் இயங்கி வரும் இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த கிர் பசுவின் ஹோமியத்தை கொண்டு மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் எனவும், தாவரங்களில் பரவும் கிருமிகளை அழிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகவும் கோலாகியா தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic