கேராளாவைச்சேர்ந்த இளம் பெண் பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார். இவரது திடீர் மரணம் பத்திரிகை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு வயது 28.
கேரள மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். பல்வேறு பத்திரிகை நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக பத்தனந்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நிலை குலைந்து மயக்க நிலைக்கு வந்த அவரை உயிருக்கு போராடிய நிலையில் கொழஞ்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள் அனுஸ்ரீயின் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது உடல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அலட்சியம் காரணமாக அனுஸ்ரீ இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிரதே பரிசோதனைக்குப் பின்னர் தான் உறுதியாக தகவல்களை கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பத்திரிகையாளரின் இந்த மறையும் பத்திரிகை உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ள அனுஸ்ரீ, பிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் செய்தி பிரிவான மலையால சமயம் பத்திரிகயின் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments