தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நடிகர் நெப்போலியன் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த "புது நெல்லு புது நாத்து" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் நெப்போலியன். அதன் பின் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி திமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபடத்துவங்கினார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு முறை எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் திமுகவிலிருந்து விலகி பா.ஜ.கவின் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது அரசியலில் அவ்வளவாக தலைகாட்டாத நெப்போலியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்தது.
இந்நிலையில் நெப்போலியன் மீண்டும் சினிமாவில் நடிக்கத்துவங்கியிருக்கிறார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், கிடாரி, முத்துராமலிங்கம், மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதுப்பொழிவுடன் தனக்கென உரிய அதே கம்பீரத்துடனும் உத்வேகத்துடனும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.
No comments:
Write comments