Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 12, 2016

புதுச்சேரியில் மதுவிலக்கா..? இதெல்லாம் நடக்குற காரியமா...?



புதுவை மாநிலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் ஏதும் இல்லை என அம்மாநில முதலைமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக பொருளாளர் முக ஸ்டாலினை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது " நான் முதல்வராக பதவியேற்றபோது பதவி ஏற்பு விழாவிற்கு நேரடியாக வந்து வாழ்த்து சொன்னார் முக ஸ்டாலின், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை சந்திக்க சென்னை வந்தேன். புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் எடுக்கும் முடிவிற்கு எப்போதும் திமுக ஆதரவு தெரிவிப்பதாக அவர் உறுதியளித்தார்.

மத்திய அரசிடமிருன்டு கிடைக்கப்பெரும் நிதியை வைத்து நல்லதிட்டங்களை செயல்படுத்த உள்ளது பற்றியும் பேசினோம். புதுவை மாநிலத்தில் தொழில் வளம் மற்றும் வேலை வாய்ப்பு பெருக்கவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையை நவீனமயமாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக திமுகவின் ஆதரவை கேட்டேன். அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்கள் இரு கட்சிகளுக்குமிடையே நல்லுறவு பலமாக உள்ளது என கூறினார்.

புதுவை மாநிலத்தில் நடைபாதையில் நிறைய கடைகள் இருப்பதால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என புகார்கள் வருகிறது. இந்த நடைபாதைகளை அகற்றிவிட்டு அவர்களுக்கு மாற்றாக கடை அமைக்க வேறு இடம் கொடுக்கலாமா? என்கிற ரீதியில் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமுல்படுத்தப்பட்டு வருகிறதே அதேபோன்று புதுவையிலும் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா? என்று கேட்டதற்கு மதுவிலக்கை புதுவையில் கொண்டு வருவதற்கான எந்த சாத்தியமோ எண்ணமோ இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic