பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கலாபவன் மணி மலையாளர்ம், தமிழ், தெலுங்கு உட்பட ஏராளமான மொழிகளில் 200ற்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்த புகழ்பெற்றவர். இவர் கடந்த மார்ச் 6ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் கூறியதை அடுத்து காவல்துறையின் இது தொடர்பாக விசாரணையை துவக்கினர்.
அவரது உடல் உறுப்புக்களை பிரேத பரிசோதனை செய்த கொச்சி மருத்துவர்கள் அவரது உடலில் பூச்சிகொல்லி மருந்து கலந்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்தது. அதேபோன்று அவரது இரத்த மாதிரியை பரிசோதித்த ஹைதரபாத் தடய அறிவியல் ஆய்வுக்கூட்டம் கூறும்போது அவரது இரத்தத்தில் விஷத்தன்மை கலந்து மது இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
திரிசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து அவரது நண்பர்கள், அல்லது உதவியாளர்கள் சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். எனினும் அவர் மரணித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் எந்த துப்பும் கிடைக்காததால் கேரள டி.ஜி.பி இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கேரள அரசுக்கு பரிந்துரை செய்ததின் பெயரில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.
நாங்கள் நெடுநாட்களாகவே இவ்வழக்கை சிபிஐக்கும் மாற்ற வேண்டும் என்று கோரி வந்தோம். இப்போது தான் அரசு அதை ஏற்று சிபிஐக்கு மாற்றியுள்ளதை வரவேற்கிறோம். வெகு விரைவிலேயே குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று நம்புகிறோம் என கலாபவன் மணியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Write comments