சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வருகிறது மக்கள் நலக்கூட்டணி. உள்ளாட்சி தேர்தலிலும் எங்களது கூட்டணி தொடரும் என அக்கூட்டணி ஒருங்கினைப்பாளர் செய்தியாளர்களிடத்தில் கூறினாலும், உள்ளாட்சி தேர்தல் வரை இக்கூட்டணி உயிரோடு இருக்குமா என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் விருவிருப்பாக, பிரச்சாரங்களில் கலக்கி வந்த தேமுதிக, த.மா.க மற்றும் மக்கள் நலக்கூட்டணியினர் தேர்தலுக்கு பின் ஒவ்வொருவரும் சோகத்துடனே காணப்படுகின்றனர். இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக, மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் சீக்கிரமே விலகிவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை செய்த விஜயகாந்த் தேர்தல் தோல்விக்கு காரணம் மக்கள் கூட்டணியில் இணைந்ததால் தான் என ஒட்டுமொத்தமாக கருத்துக்கூற எப்போது அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்ற அறிவிப்பு தேமுதிக தரப்பிலிருந்து வெளியாவது மட்டுமே பாக்கி. கூட்டணி கட்சித்தலைவர்கள் விஜயகாந்தை சந்திக்க சென்ற போது விஜயகாந்த் தரப்பிலிருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காததை கண்டு கூட்டணி தலைவர்கள் சோகமாக உள்ளனர்.
தேமுதிக, த.மா.க இருவரும் கூட்டணியில் விட்டு விலகப்போவதை அடுத்து திருமாவளவனும் வேறு வழியின்றி திமுகவிடம் தஞ்சம் அடையப்போவதாகவே கூறப்படுகிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருக்க வழக்கம் போலவே மதிமுக தனியாக கழட்டி விடப்படும் என்றே தெரிகிறது. சோடா பாட்டில் போல திறக்கும்போது பொங்கி வந்த மக்கள் நலக்கூட்டணி இறுதியில் புஸ்ஸுன்னு போய்விட்டது என்று சொல்லப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் வரை இக்கூட்டணி தாக்குப்பிடிக்காது என்றே தெரிகிறது.
மொத்தத்தில் போனி ஆகாத கடையாக மக்கள் நலக்கூட்டணி போனது என்பதே நிதர்சனம்.
No comments:
Write comments