54 வயது விமலா என்ற பெண் தனது கணவன் நரசின்ஹ்வுடன் அகமதாபத் அருகே உள்ள சர்தர் நகரில் வசித்து வந்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றனர். அப்போது தனது கணவனை உடல் உறவுக்கு அழைத்திருக்கிறார் விமலா. இதற்கு மறுத்த கணவன் மீது சந்தேகம் கொண்ட அந்த பெண் கையில் கிடைத்த கம்பு ஒன்றை எடுத்து தனது கணவன் தலையில் சரமாரியாக அடித்திருக்கிறார். இதனால் பலத்த காயம் அடைந்த நரசின்ஹ் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விமலா கூறும்போது தனது கணவன் வேறு யாருடனோ தொடர்பு வைத்திருப்பதாக தான் சந்தேகித்ததாகவும், உறவுக்கு அழைத்தும் மறுத்ததால் அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் விமலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கிற்கான தீர்ப்பு இன்று அகமதாபாத் சிறப்பு செஷன் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் விமலாவுக்கு ஆயுள்தண்டனை வழங்குவதாகவும், மேலும் 2000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி யு.எம். பட் தெரிவித்தார். அபராத தொகையை கட்ட மறுக்கும் பட்சத்தில் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Write comments