முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சோனிய காந்தியின் மகள் பிரியங்கா காந்தி ஆரம்பம் முதலே அரசியளில் அதிகம் ஈடுபாடு இல்லாமலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது மட்டும் தேர்தல் பிரச்சாரங்கள் ஈடுபட்டு வந்தார்.
சமீக நாட்களாக தனது பாட்டி இந்திரா காந்தியைப்போலவே உடை அணிந்து மக்களை கவரும் தோற்றத்தில் வளம் வரும் பிரியங்கா காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் அவரை தீவிரமாக அரசியலில் ஈடுபடுத்த கட்சித்தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபியில் நடக்கவிருக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாகவோ அல்லது கூட்டணி கட்சி சார்பாகவோ பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. உபியின் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு நிகராக பலமான பிரபலமான வேட்பாளரை முன்னிருத்தி தேர்தல் களத்தை சந்தித்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இதனை அடுத்டு பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனினும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோதரா மீதான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க பூதகரமாக ஆக்கி வரும் இந்நிலையில் ப்ரியங்காவின் அரசியல் ஈடுபாடு எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்பதை சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

No comments:
Write comments