Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

ஹிலாரி - டிரம்ப் இடையே வலுக்கும் கருத்து மோதல்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் உறுதிசெய்யப்பட்டுவிட்டதால இருவருக்குமிடையே கருத்து மோதல் வலுத்துவருகிறது.

வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. குடியரசுக் கட்சி சாபில் பிரபல தொழில் அதிபர் டொனலாட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற வேண்டிய ஆதரவு வாக்குகளை இவ்விருவரும் பெற்றுவிட்டதால் ஹிலாரி மற்றும் டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இவ்விருவருக்குமிடையே தேர்தல் பிரச்சாரத்திலும் சரி சமூக வலைத்தளங்களிலும் சரி கருத்து மோதல் வலுத்து வருகிறது.

தற்போதைய அதிபர் பராக் ஒபாமா ஹிலாரி கிளிண்டனே அமெரிக்காவின் அதிபராக வரவேண்டும் என்று வெளிப்படையாகவே தனது ஆதரவை ஹிலாரிக்கு தெரிவித்தார். இதனை அடுத்து ஹிலாரி தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்பிற்கு அதிபர் தேர்தலில் தோல்வியே கிடைக்கும் என்பதை மறைமுகமாக உணர்த்துமாறு "இனி உங்களது டுவிட்டர் கணக்கை அழித்துவிடுங்கள்" என ஹிலாரி கருத்து பதிவிட்டிருக்கிறார். பதிவிட்ட 2 மணி நேரத்திலேயே 20 லட்சம் பேர் அதனை மறு டுவீட் செய்துள்ளனர். அதே சமயத்தில் ஹிலாரியின் இந்த விமர்சனத்திற்கு டிரம்ப் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹிலாரி வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது தனக்கு வந்த 33ஆயிரம் ஈமெயில்களை அழித்தார் என்ற குற்றச்சாட்டை நினைவுபடுத்தி விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஆகும் தகுதி ஹிலாரிக்கு இல்லவே இல்லை என டிரம்பும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic